2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

குடிநீர் பெற கொடுப்பனவுகள் வழங்கல்

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜௌபர் கான்

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை கிராமத்தில் வறிய குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் குடிநீரை பெற்றுக் கொள்வதற்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பிரதயமைச்சர்; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் ஹிறா பவுண்டேனசன் நிறுவனத்தின் உதவியில் இந்த இலவச குடிநீர் இணைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த திட்டத்தின் கீழ் 5ஆம் கட்ட காசோலை கொடுப்பனவு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.

இந்த காசோலைகள் வழங்கும் வைபவம் காங்கேயனோடை அக்ஸா வித்தியாலய மண்டபத்தில் காங்கேயனோடை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் எம்.முஜாஹித் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது 5ஆம் கட்டமாக 50 குடும்பங்களுக்கு குடிநீர் கொடுப்பனவு வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .