2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முன்பள்ளி கல்வியின் முக்கியத்துவத்தை விழிப்பூட்டும் வீதி நாடகம்

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், மாணிக்கப்போடி சசிகுமார்


முன்பள்ளி கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோருக்கு விழிப்பூட்டும் வீதி நாடகம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நடைபெற்றது.

பெற்றோர் தங்களது குழந்தைகளின் கல்வியிலும் ஒழுக்கத்திலும் அவர்களின் வளர்ச்சியிலும் கண்காணிப்பாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதாக இந்த நாடகம்  அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அசீஸ், மாவட்டச் செயலக அதிகாரிகள் மற்றும் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .