2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிறிய நடுத்தர அளவிலான தொழில் அபிவிருத்தி சேவை நிலையம் திறப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையில் சிறிய நடுத்தர அளவிலான தொழில் அபிவிருத்திச் சேவை நிலையம் நேற்று திங்கட்கிழமை  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திறந்து வைத்துள்ளார்.

இந்தத் திறப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா,  பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் எஸ்.ஏ.அழகக்கோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சிறிய நடுத்தர முயற்சியாளர்களுக்கான அறிவுரைகளையும் திட்டமிடல்களுக்கான வழிகாட்டல்களையும்  எதிர்கால முன்னேற்றத்துக்கான செயற்பாடுகளையும்  கடன்கள் வழங்குதல் போன்ற செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னோடியாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை  மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் சிறிய நடுத்தர முயற்சியாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வும் நடத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X