2025 மே 01, வியாழக்கிழமை

பாக். உயர் ஸ்தானிகர் - மாகாண அமைச்சர் சந்திப்பு

Super User   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள முதலீட்டு திட்டங்களின் மும்மொழிவுகள் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஹாஸிம் ஹுரேசியிற்கும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோரிற்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போதே குறித்த மும்மொழிவுகள் உயர் ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டன.

அத்துடன் கிழக்கு மாகாண அபிவிருத்தி முன்னெடுப்புக்கள், எதிர்கால திட்டங்கள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக மாகாண அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிக முக்கியம் எனவும் இதற்கு பாகிஸ்தான்  உதவ வேண்டும் எனவும் அமைச்சர் இந்த கலந்துரையாடலின் போது உயர் ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .