2025 மே 01, வியாழக்கிழமை

புதைப்பொருள் தேடும் கருவிகளுடன் நால்வர் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

புதைப்பொருள் தேடும் கருவிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை நகரில் கைது செய்யப்படும் பொழுது அவர்கள் வசம் ஒரு முச்சக்கர வண்டியும் புதைப்பொருள் தேடுதலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளும் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் அம்பலாங்கொடையைச் சேர்ந்தவர் இன்னொருவர் வாழைச்சேனை கிண்ணையடியைச் சேர்ந்தவர் ஏனைய இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அம்பலாங்கொடையைச் சேர்ந்த நபர் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் என்றும் இவர் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்றும் தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .