2025 மே 01, வியாழக்கிழமை

அரசியல்வாதிகள் இனவிரோத கருத்துக்களை தவிர்க்க வேண்டும்: அரியநேத்திரன் எம்.பி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் இன விரோத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த சில நாட்களாக கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை கூறிவருகின்றனர். இதில் குறிப்பாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்துக்கள் தமிழ் மக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது.

கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவு கடந்த 30 வருடத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது அதை தரம் உயர்த்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தப்படுவதுவதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே முயல்கின்றனர்.

எதிர்காலத்தில் கல்முனை தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதாக இருந்தால் கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவு தரமுயர்த்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தடையாக இருக்கக்கூடாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில கடந்த 2008ஆம் ஆண்டு எதுவித நிலத்தொடர்பும் அற்ற வகையில் முஸ்லிம்களுக்கு என்று தனியான கல்வி வலயம் ஒன்று உருவாக்கப்பட்ட போது அதை எந்த தமிழ் தலைவரும் எதிர்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தற்போது கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் விடும் அறிக்கைகள் அவர்களது நடவடிக்கைகள் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதாக உள்ளதுடன் அவர்களின் சுயலாப போக்கையே காட்டுகின்றது.

எனவே இவ்விடயம் தொடர்பாக அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முன்வருவதுடன் தமது இன விரோத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்' அவர் என குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .