2025 மே 01, வியாழக்கிழமை

நம்பிக்கையை இழக்காத இவர்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்


அங்கவீனமான ஒருவர் தானே சைக்கிளை செலுத்திச்சென்று  தைத்த ஆடை வியாபாரம் செய்து வருகின்றார்.

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசமான மஞ்சந்தொடுவாய் முகைதீன் தைக்கா வீதியல் வசிக்கும் மஹ்மூது லெப்பை அப்துல் றஸ்ஸாக் என்ற 60 வயதான வயோதிபர் ஒரு காலை முற்றாக இழந்தவர்.

சுமை தூக்கும் தொழிலாளியான இவர் கடந்த 2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் சீமெந்து மூட்டைகளை தூக்கும்போது சீமெந்து பைக்கட் அட்டிகள் சரிந்து அவருக்கு மேலே விழுந்தமையால் படுகாயமடைந்து நிலையில் இவர்  ஒரு காலை முற்றாக இழந்துவிட்டார்.

காலை இழந்தாலும் தன்னோடு ஒன்றாக வாழும் நம்பிக்கையை இழக்கவில்லை. இந்த நிலையில்,  ஒற்றைக்காலால் மாத்திரம் சைக்கிளை மிதித்து செலுத்திச் சென்று தைத்த ஆடை வியாபாரம் செய்துவருகின்றனார்.

சுமார் 13 அல்லது  14 கிலோமீற்றர் தூரம் சென்று தைத்த ஆடைகளை விற்பனை செய்துவருகின்றார்.

சைக்கிளை மிதித்துச் செலுத்துவதற்கு 02 கால்களுமே அவசியம். ஆனால், இவர் ஒரு காலை மாத்திரம் பயன்படுத்தி சைக்கிளை மிதித்து செலுத்திச் செல்கின்றார்.

மேற்படி வியாபாரத்தின் மூலம் தினமும் 200 முதல்  300 ரூபாவைத்தான் சம்பாதிக்க முடிகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.

இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தத் தொகை போதாது எனவும் அவர் கவலையுடன் கூறுகின்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .