2025 மே 01, வியாழக்கிழமை

பொன். செல்வராசா எம்.பிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவஅச்சுதன்


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவிற்கு எதிராக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களே இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாகவே எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிரகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவிற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .