2025 மே 01, வியாழக்கிழமை

முதியவரின் மரணம் இயற்கையானது: பொலிஸார்

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் கடந்த வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்ட முதியவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதணையில் குறித்த முதியவர் இயற்கையாக மரணமடைந்துள்ளார் என தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் கடந்த வியாழக்கிழமை (12) அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் சடலமொன்று (19) ஆம் திகதி  காலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பரீட் நகரைச் சேர்ந்த பக்கீர் முகைதீன் மஜீட்(65) என்பவரின் சடலமே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் தோண்டி எடுக்கப்பட்டது.

மேற்படி நபர் தனது வீட்டில் வைத்து மரணமடைந்திருந்தார். இவரின் சடலம் அன்றைய தினமே புதிய காத்தான்குடி பதுறியா ஜும் ஆ பள்ளியால் மைய்யவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதைனையடுத்து இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விசேட பொலிஸ் புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வந்தனர்

இவ்விடயம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லா சடலத்தை தோண்டுமாறு உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் குறித்த நபரின் சடலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லா முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை (19) தோண்டப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பிரேத பரிசோதணையில் குறித்த முதியவர் இயற்கையாக மரணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு;ள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதியவரின் சடலம் மீள அடக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .