2025 மே 01, வியாழக்கிழமை

சிசுவின் சடலம் மீட்பு

Super User   / 2013 டிசெம்பர் 23 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


களுவாஞ்சிகுடி, மகிழுர் - நாகபுரம் கிராமத்தில் சிசுவொன்றின் சடலமொன்று இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. பிறந்து சில மணி நேரங்களான சிசுவொன்று பசளை பையினால் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தின் முருகன் ஆலயம் ஒன்றுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த சிசுவினுடைய சடலம் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பெண்ணொருவர் பையொன்றை வீசிவிட்டுச் சென்றதனைத் தான் அவதானித்ததாக அப்பகுதியில் கால்நடை மேப்பில் ஈடுபட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிசுவின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தலைமையிலான குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .