2025 மே 01, வியாழக்கிழமை

மண்டூர் - குருமண்வெளி ஓடத்துறைக்கு பதிலாக பாலம் அமைத்துத் தருமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மண்டூர் - குருமண்வெளி ஓடத்துறைக்கு பதிலாக நிரந்தர பாலம் அமைத்துத் தருமாறு கடித மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஊடாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஜனாதிபதி இணைப்பாளர் அருண் தம்பிமுத்துவிடம் மண்டூர் கிராம அபிவிருத்திச் சங்கம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான  பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாகக் காணப்படுவது மண்டூர் - குருமண்வெளி ஓடத்துறையாகும்.

மண்டூர் - குருமண்;வெளி ஓடத்துறை ஊடாகப் பயணிக்கும் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரம் ஓடத்துறை பயணிப்பதால் அந்நேரங்களிலேயே மக்கள் தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும், இரவு வேளைகளில் இந்த ஓடத்துறை மூலம் பயணிக்க முடியாதுள்ளதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .