2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சிறுவர்களுக்கிடையில் நட்புறவை வளர்க்கும் நிகழ்ச்சித் திட்டம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சதன்


மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிறுவர்களுக்கிடையில்  நட்புறவை வளர்க்கும் நிகழ்ச்சித் திட்டம் செவ்வாய்க்கிழமை (24) காலை சந்திவெளி மாணிக்கவாசகர் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது.

கிரான் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்றுத்தெற்கு கிரான் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு மற்றும் உளசமூக உத்தியோகத்தர்  எஸ்.எழிலவன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் சு.பற்குணநாதன், சந்திவெளி மாணிக்கவாசகர் சிறுவர் அபிவிருத்தி நிலைய தலைவர் சி.தயாபரன், முகாமையாளர் வ.றமேஸ் ஆனந்தன் மற்றும் எஸ்கோ நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் மு.நேசலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர் கழக சிறுவர்கள்,  சந்திவெளி மாணிக்கவாசகர் சிறுவர் அபிவிருத்தி நிலைய சிறுவர்கள் பங்கேற்றனர்.

இங்கு சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்குடன் நாடகம், அரங்கவிளையாட்டுக்கள் மற்றும் தனிநிகழ்வுகள்  போன்றன இடம்பெற்றன.
இறுதியாக சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டு சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .