2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பெரும்போக வேளாண்மைச் செய்கை கோரை புற்களால் பாதிப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

தற்போது செய்கை பண்ணப் பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கையில் அதிகளவு கோரையினப் புற்கள் படர்ந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது படுவான்கரைப் பிரதேசம் உட்பட பரவலாக பெரும்போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேளாண்மை வயல்களில் முடிச்சுக் கோரையினப் புற்கள் பீடித்துள்ளதனால் வேளாண்மை செய்கையினைப் பாத்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இக்கோரையினப் புற்கள் களை நாசினிகளுக்கும் கட்டுப்பாடமல் உள்ளதனால் அறுவடையின் போது நெல்லோடு சேர்ந்து புற்களின் விதைகளும் சேர்ந்து வரும்.

இதனால் மீண்டும் விதைப்பதற்கு உகந்த விதை நெல்லினைப் பெற முடியாத சூலும் காணப்படுவதாகவும் விவிசாயிகள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .