2025 மே 01, வியாழக்கிழமை

போக்குவரத்து பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Super User   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

போக்குவரத்து பொலிஸாருக்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முறக்கொட்டான்சேனையை சேர்ந்த கணேசராசா ரகுநாதன் என்பவரினாலேயே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பரிவு பொறுப்பதிகாரிக்கு எதிராகவே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தான் பயணித்துக் கொண்டிருந்த போது தன்னை வழிமறித்து நிறுத்திய போக்குவரத்து பொலிஸார் தனக்கு சிங்களத்தில் குற்றப் பத்திரம் எழுதித் தந்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை வழிமறித்த பொலிஸார் தக்க காரணமின்றியும் தனக்குப் புரியாத சிங்கள மொழியிலும் இந்தக் குற்றப் பத்திரத்தைத் தந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடமையிலிருந்த குறித்த போக்குவரத்து பொலிஸார் சீருடை இன்றியும் வெள்ளைப்பட்டி மற்றும் விசில் இன்றியும் காணப்பட்டதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறிருப்பினும் தனது மொழி உரிமை மீறப்பட்டிருப்பதாலே தான் இந்த விடயத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவத்துள்ளார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரனிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .