2025 மே 01, வியாழக்கிழமை

தொழில்நுட்ப பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மட்டு தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம்

Super User   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


தொழில்நுட்ப பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சண்முகம்பிள்ளை பாலசுப்பிரமணியம் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரிக்கு அண்மையில் விஜயம் செய்துள்ளார்.

2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயந்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது பணிப்பாளர் நாயகத்துடன் மேலதிக பணிப்பாளர் நாயகம் குலதுங்க, பிரதம கணக்காளர், நிருவாகப் பணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இணைந்திருந்தனர். இதன்போது, தொழில்நுட்ப கல்லூரியின் பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் காணப்பட்டன.

மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் 23 பாடநெறிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு முதல் 29 தொழில்நுட்ப பாடநெறிகள் கற்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலக வங்கியின் அனுசரனையில் 2014 – 2020ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இலங்கையில் தெரிவு செய்யப்பட்டுள்ள 10 தொழில்நுட்ப கல்லூரிகளில் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியும் ஒன்றாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .