2025 மே 01, வியாழக்கிழமை

டெங்கு ஒழிப்பு சிரமதானம்

Super User   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜௌபர் கான்


மட்டக்களப்பு நகரில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நகரை துப்பரவு செய்யும் சிரமதானப் பணிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களிலுமிருந்து தலா 10 பொலிஸார் வீதம் 120 பொலிஸாருடன் மாநகர சபை ஊழியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த சிரமதான பணியில் பங்குபற்றினர்.

டெங்கு பரவும் இடங்களாக இனம் காணப்பட்ட வீதிகள், பொதுமக்கள் கூடும் பொது இடங்கள், அலுவலகம், வியாபார நிலையங்களின் சுற்றுப்புறங்கள்,ஆற்றுப்படுக்கைகள், வடிகான்கள் மற்றும் குப்பைத் திடல்கள் என்பன இதன்போது துப்பரவு செய்யப்பட்டன.

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவின் பொறுப்பாளர் எஸ்.ஐ. சேனநாயக்கா, மட்டு. மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .