2025 மே 01, வியாழக்கிழமை

கண்டல் தாவரங்கள் அழிவு: மீனினங்களின் பெருக்கம் குறைவதாக விசனம்

Kogilavani   / 2014 ஜனவரி 01 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு, வாவியில் கண்டல் தாவரங்கள் அழிந்து வருவதனால் மீனினங்களின்  பெருக்கம் குறைந்து வருகின்றன என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கண்டல் தாவரங்களின் வேர்களை செத்தல் மீன்கள் மற்றும் நண்டுகள் அதிகம் உண்பதனால் வாவியில் இத்தாவரங்கள் அதிகம் காணப்பட்ட காலங்களில் இருந்த மீன், நண்டு பெருக்கங்கள் இப்போது குறைவடைந்துள்ளன.

கூடுகளின் வடிவில் இதன் வேர்கள் நீரினுள் காணப்படுவதனால் வெப்ப காலங்களில் அதனுள் மீன்கள் சென்று ஓய்வு எடுப்பதாகவும் மேலும் கூறினர்.

பசுமையான சூழலையும் மற்றும் வாவியை அழகுபடுத்தும் நோக்குடன் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றினால் கடந்த காலத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அப்போது யுத்த காலமானதனால் இத்தாவரங்களின் மறைவிடங்களை நாசகார வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடும் என்பதனை முன்வைத்து இத்தாவரங்கள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .