2025 மே 01, வியாழக்கிழமை

காட்டு யானை தாக்கி வயோதிபர் மரணம்

A.P.Mathan   / 2014 ஜனவரி 04 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.எம்.எம்.முர்ஷித்
 
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பேரில்லாவெளி பூலாக்காடு எனுமிடத்தில் இன்று (04) காட்டு யானை தாக்கியதில் சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி விநாயகமூர்த்தி வயது (61) என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
 
பேரில்லாவெளி பூலாக்காடு எனுமிடத்திலுள்ள வயல்வாடியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போது காட்டு யானையால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
 
சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்கும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் சற்று முன்னர் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • Kamban Saturday, 04 January 2014 05:48 PM

    ஐயோ, யானைக்கு அடிகிடி ஒன்னும் படலயே? என்றுதான் வினா எழுப்புவார்களே தவிர மக்களைப் பற்றியல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .