2025 மே 01, வியாழக்கிழமை

சேவையிலிருந்து விலகிய சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 05 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

சிவில் பாதுகாப்புப்படை சேவையிலிருந்து விலகிய சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான சேவைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்புப்படை தலைமைக் காரியாலயமான இங்கினியாகலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் றியர் அட்மிரல் ஆணந்தப்பீரிஸ் கலந்து கொண்டு சேவையிலிருந்து விலகிய சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் 35பேருக்கான சேவைச் சான்றிதழ்களை வழங்கி வைத்தார். 

இதில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை, மகாஓயா கட்டளையிடும் அதிகாரி மெஜர் கமல் ஜெயவீர சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி குமுதினி பீரிஸ் மற்றும் பல உயர் அதிகாரிகளும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .