2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு. மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கருணாரட்ன நியமனம்

Super User   / 2014 ஜனவரி 06 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக எச்.கருணாரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். மட்டு. மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய வி.இந்திரன் களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடமாற்றப்பட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே எச்.கருணாரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திரனிற்கான பிரியாவிடை அணி வகுப்பு மரியாதை மட்டு. மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலக வளாகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ். லால் செனவிரட்ன உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .