2025 மே 01, வியாழக்கிழமை

பொலிஸாரால் காணி சுவீகரிக்கப்பட்டதென முறைப்பாடு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 06 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வாழைச்சேனை  பொலிஸார் கையகப்படுத்தியுள்ள தனது ஒரு துண்டுக் காணியை மீட்டுத் தருமாறு கேட்டு மயிலங்ரச்சை கிராமத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். மயிலங்கரச்சை கிராமத்தைச் சேர்ந்த எச்.எல்.பி.நந்தபால என்பவரே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

'கொழும்பு – மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலை ஓரமாக மயிலங்கரச்சை எனும் கிராமத்திலுள்ள தனது ஒரு ஏக்கர் விஸ்தீரமான காணியை 2006ஆம் ஆண்டு வாழைச்சேனைப் பொலிஸார் கைப்பற்றிக் கொண்டனர்' என்று அவர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

'போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வாகனங்களைப் பரிசோதிப்பற்கும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்குமுரிய இடமாகப் பயன்படுத்துவதற்கே பொலிஸார் இந்த இடத்தை தம்வசம் எடுத்துக்கொண்டனர்.

எனினும் தற்போது போர் முடிவடைந்துள்ள நிலைமையில் அந்த இடத்தில் எந்தவிதமான வாகனப் பரிசோதனைகளும் இடம்பெறுவதில்லை. குறிப்பிட்ட காணி நீண்ட காலமாக காடு மண்டிக் கிடக்கின்றது. ஆயினும் குறிப்பிட்ட எனது காணியைத் திருப்பி என்னிடம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்து வருகின்றனர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, 'எனது காணியை மீட்டுத் தந்தால் நான் அந்த இடத்தில் எனது வாழ்வாதாரத் தொழிலைத் தொடங்க முடியும் என்று அவர் அந்த முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2006ஆம் ஆண்டிலிருந்து எனது காணியை பொலிஸார் பராமரிக்கவும் இல்லை, காணிக்குரிய குத்தகை கூடத் தரவில்லை என்றும் அவர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .