2025 மே 01, வியாழக்கிழமை

சட்டவிரோத கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டன; அறுவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 08 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன், ரி.எல்.ஜவ்வர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் யானைகள் உள்ள வட்டவான் மற்றும் சிறுதேன்கல் ஆகிய காட்டுப்பகுதிகளில்; நேற்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து மேற்கொண்ட சோதனையின்போது சோளச் சேனையினுள் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டிருந்த 4 மற்றும் 5 அடி உயரமான 70 கஞ்சாச் செடிகளை கைப்பற்றியுள்ளதுடன்,  சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைதுசெய்துள்ளதாகவும்    மட்டக்களப்பு மாவட்டத்தின் மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாகரன் தெரிவித்தார்.

இந்த கஞ்சாச் செடிகள் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியானது எனவும் அவர் கூறினார்.

காட்டில் யானைகளின் நடமாட்டத்தினால் முழுச் செடிகளையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்களை வாழைச்சேனை நீதிமன்றத்தில்; ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கே.ஜி.எம். பண்டார, திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா ஆகியோரின்  வழிகாட்டலில்  பரிசோதகர்களான ஆர்.எஸ்.கே.ரணசிங்க, டி.பி.அலவத்தகமகே, ஏ.ஆனந்தநாயகம், அகாரிகளான கே.ரமேஸ்குமார், எஸ்.செல்வராசா, எஸ்.ஜெயக்குமார், எம்.ஐ.அன்வர், டபிள்யூ.எம்.கே.வர்ணசூரிய, கே.செந்தில்வண்ணன் ஆகியோர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .