2025 மே 01, வியாழக்கிழமை

இயற்கைப் பசளையில் இஞ்சி உள்ளிட்டவை உற்பத்தி

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 09 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள காணியொன்றில்; முதல் தடவையாக நவீன விவசாய முறையிலும் இயற்கை பசளை இட்டும் இஞ்சி, நேத்திரா இன வாழைகள் உட்பட மரக்கறி வகைள் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதனை காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் முக்கியஸ்தரான எம்.எச்.எம்.பசீர் உள்ளிட்ட பலர் நேற்று புதன்கிழமை பார்வையிட்டனர்.

வெளிநாடுகளில் குறுகிய நிலப்பரப்பில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதுபோன்று, இங்கும் இவ்வாறான உற்பத்தியை  மேற்கொள்வதாகவும் இந்த உற்பத்தியில் ஈடுபடும் எம்.பி.எம்.சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதியினதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினதும் 'திவிநெகும' திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும்  இதனை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .