2025 மே 01, வியாழக்கிழமை

வீடுகளை நிர்மாணிப்பதற்கு கால அவகாசம் பெற்றுகொடுப்பேன்: முரளிதரன்

Kanagaraj   / 2014 ஜனவரி 12 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவிந்திரன்


வீடுகளை நிர்மாணிக்கும் போது பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு கால அவகாசமும் பெற்றுகொடுக்கப்படும் என்று மீள்குடியேற்ற   பிரதி அமைச்சர்  விநாயகமூர்த்தி  முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு  மாவட்டத்தின்    பட்டிப்பளை   பிரதேச  செயலாளர்  பிரிவின்   வீட்டுத்திட்டத்திலுள்ள 740  பயனாளிகள் தாங்கள் வீடுகளை நிர்மாணிக்கும் போது முகம்கொடுக்கும் பிரச்சினைகளை பிரதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

பட்டிப்பளை   பிரதேச  செயலாளர்  சிவப்பிரியா  வில்வரட்னம்   தலைமையில் கொக்கட்டிச்சோலை   கருணா அம்மான்  கலாச்சார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வைபவத்தின் போதே மக்கள் தாங்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை முன்வைத்தனர்

இந்த சந்திப்பில் கொக்கட்டிச்சோலை, முதளைக்குடா, மாவடிமுன்மாரி,பண்டாரியாவெளி,கற்சேனை உட்பட  பல  கிராமமக்கள் கலந்துகொண்டனர்.
 
சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள், வீடுகளை நிர்மாணிப்பதற்கு கட்டம் கட்டமாகவே பணம் வழங்கப்படுகின்றது. எங்கள்   மனித வளங்களைப்பயன்படுத்தியே   நாங்கள் வீடுகளை நிர்மாணிக்கின்றோம். அவ்வாறு வீடுகளை  நிர்மாணிக்கும்போது காலதாமதம்   ஏற்படுகின்றது.

வழங்கப்படுகின்ற மூன்று மாத காலத்திற்குள்  வீட்டை கட்டிமுடிக்க முடியாமையினால்    கட்டம் கட்டமாக  வழங்கப்படும் பணம் இடைநிறுத்தப்படும்  என  அதிகாரிகள்  எச்சரிக்கின்றனர். ஆகையினால், வீடுகளை நிர்மாணிப்பதற்கு கால அவகாசம் பெற்றுகொடுக்குமாறு கோரிநின்றனர்.

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி  முரளிதரன் வீடுகளை துரிதமாக  கட்டிமுடிக்க பயனாளிகளும் முயற்சிக்கவேண்டும் என்று அறிவுரை கூறியதுடன் அதிகாரிகளுடன் கலந்துரையாடி காலஅவகாசத்தை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

அரச சார்பற்ற நிறுவனங்களால் அரசாங்கத்தின் ஊடாக இந்த உதவி திட்டத்தின் கீழும் வீடுகளை நிர்மாணிப்பதற்காக பயனாளி ஒருவருக்கு தலா ஐந்தரை இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .