2025 மே 01, வியாழக்கிழமை

மீனவர்களுக்கு உயிர்பாதுகாப்பு அங்கிகள்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 13 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன், தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில்  முதற்கட்டமாக 50 மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு அங்கிகளை அம்மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் இன்று திங்கட்கிழமை (13) வழங்கி வைத்துள்ளது.

அத்துடன், சுகவீனமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மீனவர் ஒருவருக்கு காப்புறுதிப் பணம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு, நொச்சிமுனை, கிரான்குளம், ஆரையம்பதி, பாலமுனை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மேலும் 300 மீனவர்களுக்கு உயிர்பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படவுள்ளன.  

ஒரு உயிர் பாதுகாப்பு அங்கியின் பெறுமதி 2,700 ரூபா என  மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்றொழில் திணைக்களத்தின் அலுவலகத்தில் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஷ்ட கடற்றொழில் பரிசோதகர் ஜே.ஏ.இ.எக்ஸ்.ராஜ்குமார், கடற்றொழில் பரிசோதகர்களான பி.மனோகரன், ரி;.அமிர்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வாவி மற்றும் கடல் மீன்பிடிகளில்  23,672 மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த 25,159 பேர் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், 1,223 வெளியிணை இயந்திரப்படகுகள், 360 ஆழ்கடல் இயந்திரப்படகுகள், 70 ஒருநாள் இயந்திரப்படகுகளும்; மீன்பிடியில் ஈடுபடுகின்றன.

இங்குள்ள மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு அங்கிகளும் காப்புறுதியும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .