2025 மே 01, வியாழக்கிழமை

ஐ.நாவில் தீர்மானம் எடுக்கும்வரை த.தே.கூ பேச்சுக்கு செல்லாது: செல்வராசா

Kogilavani   / 2014 ஜனவரி 13 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் எடுக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லாது' என்;று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் பல தடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு சென்றால் உலகத்திலேயே அதுபோன்ற முட்டாள் தனமான செயல் இல்லை என்றே கூறவேண்டும'  என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, காந்திபுரம் கிராமத்தின் பத்தினி அம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு ஆலயமுன்றலில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'யுத்தக் காலத்தில் உதவி புரியாத சர்வதேசம் உரிய தீர்வினை பெற்றுத்தருமென நாம் நம்புகின்றோம். வரவு-செலவுத்திட்ட இறுதிநாள் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது பேச்சுவார்த்தைக்கு வருமாறு எங்களை அழைத்திருந்தார்.

பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று பல தடவைகள் சென்று ஏமாற்றமடைந்திருக்கின்றோம். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் சென்றால் ஐ.நாவில் அரசாங்கத்திற்கு அழுத்தம் குறையும்.

இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி, ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்  ஆகியோர் தரவுகளை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் பேச்சுவார்த்தைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சென்றால் அரசாங்கத்திற்ற்கான அழுத்தம் ஐ.நாவில் குறையகூடிய வாய்ப்பிருக்கின்றது. ஆகையால் ஐ.நா தீர்மானம் வரும் வரையிலும் நாங்கள் காத்திருக்கின்றோம் என்றார்.

கிராமத்தின் ஒருபகுதிக்கு மின்சாரம் வழங்கப்படாமை, தும்பங்கேணி பாடசாலை  தரமுயர்த்தல், ஆலய  நிர்மாண  வேலைகள் தொடர்பான நடவடிக்கை  போன்றவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா உறுதியளித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .