2025 மே 02, வெள்ளிக்கிழமை

அரபுக் கல்லூரி மாணவரை காணவில்லை

Super User   / 2014 ஜனவரி 14 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அனாம்

வாழைச்சேனை கோழிக்கடை குறுக்கு வீதியில் வசித்து வந்த முகம்மது நிப்ராஸ் என்ற இளைஞரை கடந்த ஜனவரி 07ஆம் திகதி முதல் காணவில்லை என கடந்த ஜனவரி 12ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் அவரின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனையிலுள்ள அரபுக் கல்லூரியொன்றில் மார்க்கக் கல்வி பயின்று வரும் முகம்மது நிப்ராஸ் என்ற இளைஞர், விடுமுறையில் வீடு வந்து மீண்டும் அரபுக் கல்லூரிக்குச் சென்றவர் இன்று வரை அங்கு செல்லவில்லை என குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது மகன் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0777266121 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறியத் தருமாறு தாயார் கேட்டுக் கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X