2025 மே 01, வியாழக்கிழமை

இயற்கை சரித்திரமும் விஞ்ஞான தொல்பொருள் காட்சியகம் திறப்பு

Super User   / 2014 ஜனவரி 15 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜவ்பர் கான்


இயற்கை சரித்திரமும் மற்றும் விஞ்ஞான தொல்பொருள் காட்சியகம் மட்டக்களப்பு மாநகர வாசிகசாலை வளாகத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

விஞ்ஞான துறையில் அறிவியல் மற்றும் தேடல்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இக்காட்சியகம் ஒரு களமாக அமையவுள்ளது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அறிவையும் மற்றும் செயல்முறைகளையும் எமது துறைசார் கல்வியியலாளர்கள் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள 'விஞ்ஞான மாலுமிகள்'  அமைப்பின் தலைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிட்சை நிபுணருமான கே.அருள்நிதி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .