2025 மே 01, வியாழக்கிழமை

மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு யுனொப்ஸ் நிறுவனம் வாகனம் கையளிப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 16 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு - மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையின் பாவினைக்கென ஐக்கிய நாடுகள் சபையின் யுனொப்ஸ் நிறுவனத்தினால் சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான கெப் வாகனம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஜுடி ஜெயகுமார் தலைமையில் புதன்கிழமை இரவு (15) நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின்போது, மாவடிவெம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட உள நல புனர்வாழ்வு நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொழுதுபோக்கு மைய திறப்பு விழாவும் 'நாணல்கள்' சஞ்சிகை வெளியீடும் இதன்போது இடம்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .