2025 மே 01, வியாழக்கிழமை

உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்புக்கு உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 19 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


யுத்தத்தினால் அங்கவீனமான பெண்களைக் கொண்டு கைவினை உற்பத்திகளில் ஈடுபட்டுவரும் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்புக்கு 100,000 ரூபா பெறுமதியான உபகரணங்கள் நேற்று சனிக்கிழமை வழங்கப்பட்டன. 

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அச்சுகள், கத்தி, சுத்தியல்கள், சட்டிகள்  உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியிலுள்ள மேற்படி அமைப்பில் யுத்தத்தினால் அங்கவீனமான 20 பெண்கள் பன் புல்லைக் கொண்டு தொப்பிகள், பைகள், பூஜைத்தட்டுகள், மேசைத்தட்டுகள், மலர்ச்செண்;டுகள் உள்ளிட்ட உற்பத்திகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் ஏ.கங்காதரனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அந்த அமைப்பின் நிர்வாகத்தினரும் கைவினைகளில் ஈடுபடும் பெண்களும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .