2025 மே 01, வியாழக்கிழமை

அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 21 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


கால்நடை வளர்ப்பு கிராமிய சனசமுக அமைச்சின் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இரு மாடிகளைக் கொண்டதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்கான அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் வைத்தியருக்கான விடுதி என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதனை உத்தியோகப்பூர்வமாக திறக்கும் நிகழ்வு புனானை– ரிதிதென்ன கிராமத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகமானது இதுவரை நிறந்தரக் கட்டிடம் இல்லாமல் மகாவலி கட்டிடத்திலயே இயங்கி வந்தது.

இந்நிலையிலேயே கால்நடை வளர்ப்பு கிராமிய சனசமுக அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்கான அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி ஆர்.டி.எம்.எச்.மதுமாலா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய கால்நடை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ரீ.கே.தவராஜா மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .