2025 மே 02, வெள்ளிக்கிழமை

இறால் பண்ணையாளர்களுக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்.


மட்டக்களப்பு மாவட்டத்தில இறால் பண்ணைகளை அமைக்கும்போது  கவனத்திற்கொள்ள வேண்டிய சுற்றாடல் காரணிகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு  ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் 65 இறால் பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண கடற்றொழில் நீரியல்வளங்கள் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், கடற்றொழில் உயிரியல் வளர்ப்பு மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது  பின்வரும்  சுற்றாடல் காரணிகள் கவனத்திற்கொள்ளப்பட்டன.

உவர்நீர் ஏரியின் நீர் மட்டத்திலிருந்து இறால் வளர்ப்புத் தடாகங்களோ அல்லது கட்டிடங்களோ அமைத்தல்; கூடாது. இப்பகுதி கண்டல் தாவரங்களின் வளர்ச்சிக்கு விடல்; வேண்டும்;. கண்டல் தாவரங்கள் மீன், இறால் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு உறுதுணையாக இருப்பதால் இவை பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள இறால் பண்ணையாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான நீர் உள்ளெடுக்கும் கால்வாயையும் ஒரு பொதுவான நீர் வெளியேற்றும் கால்வாயையும் அமைப்பதன் மூலம் கண்டல் தாவரங்களின் அழிவைக்; கட்டுப்படுத்த முடியும். அத்துடன், அப்பிரதேசத்திலுள்ள இயற்கை நீர் நிலைகளையும்; மாசடையாமல் பேணல் வேண்டும்.

இறால்களுக்கு நோய்கள் தொற்றாமல் இருக்க ஒவ்வொரு பண்ணைகளுக்கும் இடையில் 50 மீற்றர் இடைவெளி இருத்தல் வேண்டும்.
இயற்கையாக நீர் வழிந்தோடும் கால்வாய் போன்றவற்றை தடுத்து நிறுத்தும் வகையில் பண்ணைகளை அமைத்தல் கூடாது.

இறால் பண்ணைகளின்  கழிவு நீர் செல்வதற்குரிய கால்வாய்கள் சிறந்த முறையில் வழிந்தோடக் கூடியவாறு அமைந்திருத்தல் வேண்டும். கால்வாய்கள் சிறப்பாக இல்லாத விடத்து அவை தேங்கி நிற்பதன் மூலம் உவர் நீர், நன்நீர் நிலங்களிற்குள் செல்வதற்கான வாய்ப்பும், இறால்களிற்கான நோய் பரம்பல் ஏற்பட ஏதுவாக இருக்கும்.

இவ்வாறான சுற்றாடல் காரணிகளை கவனத்திற்கொள்வதன் மூலம்  இறால் வளர்ப்பில் கூடுதலான உற்பத்திகளை பெறுவதுடன், சுற்றாடலையும் பாதுகாக்க முடியும் எனவும் வளவாளர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X