2025 மே 02, வெள்ளிக்கிழமை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழான அபிவிருத்தித்திட்டங்களின் கலந்துரையாடல்

Kogilavani   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு நகர்-மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்கள் அபிவிருத்திக் குழுத் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வியாழக்கிழமை (6) நடைபெற்றன.

இக்கலந்துரையாடலில் கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் முக்கியமான அபிவிருத்தி பணிகள் தொடர்பாக கிராம மக்களிடம் இருந்து இனங்காணப்பட்டதோடு அபிவிருத்திப் பணியில் மக்கள் பங்களிப்பு என்ன என்பது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

இக் கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்..கிரிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவராஜா உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி.ஜதீஸ்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதில், திவிநெகும (வாழ்வின் எழுச்சி) பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2014ஆம்  ஆண்டுக்கான வேலை திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு எல்லை வீதி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில்  2014ஆம் ஆண்டில் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ளபட்டுள்ள கிராமங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில் ஒரு கிராமத்தில் 10 பயனாளிகள் தெரிவு செயப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கிராம மட்டத்தில் பொது அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்த அபிவிருத்தி தொடர்பாக இருதயபுரம் கிழக்கு, கூழாவடி, மாமாங்கம், புன்னைச்சோலை, அமிர்தகழி, மட்டிக்கழி, பாலமீன் மடு, திஸ்சவீரசிங்க சதுக்;கம், பெரிய உப்போட்டை  ஆகிய கிராமங்கள் 2014ஆம் ஆண்டு திவிநெகும வேலை திட்டத்தில் கீழ்  இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்து பிற்பகல் 02.30 மணியளவில் மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் சர்வோதைய மண்டபத்தில் இடம்பெற்றது.

இன் கலந்துரையாடலில்  2014ஆம் ஆண்டில் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் இனைத்துக்கொள்ளபட்டுள்ள கிராமங்களில் வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் திட்டத்தில் ஒரு கிராமத்தில்  10 பயனாளிகள் வீதம் 50 பயனாளிகள்  தெரிவு செயப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கிராம மட்டத்தில் வீதி மற்றும் கட்டுமான  அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இவ் அபிவிருத்தி வேலை திட்டங்கள் தொடர்பாக இருதயபுரம் மேற்கு, சத்துருக் கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, சின்ன ஊறணி, கருவேப்பங் கேணி, திராய் மடு ஆகிய கிராமங்கள் 2014ஆம் ஆண்டு திவிநெகும வேலை திட்டத்தில் கீழ்  இனைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X