2025 மே 02, வெள்ளிக்கிழமை

காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில்  காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேச விவசாயிகள் கடந்த வெள்ளிக்கிழமை (07) ஆர்ப்பாட்டப் பேரணியியொன்றில் ஈடுபட்டனர்.

விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆரப்பாட்ட பேரணியில்  நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் பிரதான வீதியூடாக ஒரு கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து கமநல சேவைத் திணைக்களத்தை அடைந்தது.

'மனிதனின் உயிர் பெறுமதி அற்றதா?', 'யானைக் காடு எங்கள் பிரதேசம் அல்ல', 'நாங்கள் யானைக்கு எதிரானவர்கள் அல்ல', 'யானை வெடியோ மின்சார வேலியோ தேவையில்லை', 'எங்கள் காடு யானைகள் வளர்க்கும் இடம் அல்ல', 'யானைகளை சரணாலயத்திற்கு கொண்டு செல்லுங்கள்', 'யானைக்கு எதிரானவர்கள் மனித உயிரை பலி கொள்ளாதே!' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாளக் சென்றனர்.

இந்த பேரணியின் முடிவில், தங்களது கோரிக்கைகள் இடங்கிய மகஜர் ஒன்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரிடம் கையளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், காயப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட உடமைகள,; வீடுகளுக்கு நஷ்டஈட்டை வழங்க வேண்டும், யானை தங்கியிருக்கும் பற்றைக்காடுகளை துப்பரவு செய்தல் மற்றும் துப்பரவு செய்வதற்கான அனுமதி வழங்கல், யானைக்குரிய பாதுகாப்பு வேலி அமைத்தல், ஏற்கனவே அமைக்கப்பட்ட வேலிகளை மறுசீரமைத்தல், உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தும் யானைகளை வேறு இடங்களுக்கு வெளியேற்றுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன.

மகஜரைப் பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீPதர் கருத்து தெரிவிக்கையில், 'நீங்கள் வழங்கிய மகஜரில் குறிப்பிடப்பட்ட விடயங்களை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளேன். இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்கனவே தீர்வுகள் பெறப்பட்டிருந்தாலும் மக்களுக்கு யானைகளினால் அச்சுறுத்தல் உயிர் ஆபத்துகள் காணப்படுவதை என்னால் காணக்கூடியதாகவுள்ளது' என்றார்.

'இந்த பிரச்சினைக்கு தீர்வுபெற்றத்தரும் நோக்குடன் எதிர்வரும் 17ஆம் திகதி மாவட்ட ரீதியான கூட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் விவசாயிகள் கலந்துகொண்டு தமது பிரச்சினைகளை தெரிவிக்கலாம். யானைத் தாக்குதலினால் இறப்பவர்களுக்குரிய நஷ்டஈடுகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. யானைக்குரிய பாதுகாப்பு வேலிகள் தற்போது திருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன' என்றும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X