2025 மே 03, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கிரிதரன் நியமனம்

Super User   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.ரவீந்திரன்

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் வவுணதீவு பிரதேச செயலாளர் கே.தவராசா மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.சுதாகர் வவுணதீவு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X