2025 மே 03, சனிக்கிழமை

வாழைச்சேனை வைத்தியசாலையில் கண் பரிசோதனை நிலையம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கண் பரிசோதனை நிலையம் முதன்முதலாக வியாழக்கிழமை (13)  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்கள் இவ்வளவு காலமும்  கண் பரிசோதனைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று வந்தனர். தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கண் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மேற்படி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு  இலகுவாக சிகிச்சை பெறமுடியுமென வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எஸ்.தட்சனாமூர்த்தி தெரிவித்தார்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் இங்கு கண் பரிசோதனை இடம்பெறுமெனவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X