2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தகவல் தொழினுட்ப கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kanagaraj   / 2014 மார்ச் 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கட்டார் அகடமியின் அனுசரணையுடன் இயங்கும் ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்திற்காக அமைக்கப்படவுள்ள  தகவல் தொழினுட்ப கூடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை(07) மாலை இடம்பெற்றது.

சுமார் 30 இலட்ச ரூபாய் செலவில் இந்த தகவல் தொழினுட்ப கூடம் நிர்மாணிக்கப்படவிருக்கின்றது என்று ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும் ஏறாவூர் நகரசபை உறுப்பினருமான ஏ.ஆர். பிரௌஸ் தெரிவித்தார்.

இளைஞர் யுவதிகள் ஆங்கில அறிவையும் தகவல் தொழில் தொழினுட்ப அறிவையும் விருத்தி செய்ய நிர்மாணிக்கப்படவுள்ள தகவல் தொழினுட்ப கூடம் பெருந்துணை புரியும் என்று கட்டார் அகடமியின் இணைப்பாளரான கலாநிதி எரிக் சாண்ட்ஸ் நிகழ்வின்போது தெரிவித்தார்.

நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.எம். அன்ஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்டார் அகடமியின் இணைப்பாளர்களான கலாநிதி எரிக் சாண்ட்ஸ்  கமெரொன் ஜான்ஸென்  ஜொனி வோல்கர் ரெபெக்கா லூயிஸ் பெர்ரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர சபை முதல்வருமான அலிஸாஹிர் மௌலானாஇ பிரதி நகர முதல்வர் எம்.எஸ்.எம். தஸ்லீம்இ நகரசபை உறுப்பினர் ஏ.ஆர். பிரௌஸ் உட்பட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள்இ மாணவர்கள் பெற்றோர் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X