2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

புது மாப்பிள்ளை விபத்தில் பலி

Kanagaraj   / 2014 மார்ச் 10 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ் 

திருமணம் முடித்து 15 நாளான புது மாப்பிள்ளை கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்துல் ஹசன் றபீஸ் (வயது 22) என்பவர்  மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பலியான பரிதாபகரமான சம்பவம் ஒன்று மூதூரில் ஞாயிற்றுக் கிழமை  இடம்பெற்றுள்ளது.

இவர் மூதூர் தக்வா நகர் பிரதேசத்தில் அண்மையிலே திருமணம் முடித்தவராவார். 

இவர் தனது பெற்றாரைச்  சந்தித்து விட்டு கிண்ணியாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது மனைவியின் வீட்டுக்குச் நேற்றிரவு 7.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த போது மூதூர், இறால்குழி பாலத்தில் வைத்து  அந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்துக்குறித்து மேலதிக விசாரணைகளை மூதூர் போக்கு வரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X