2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

குளத்தில் விழுந்து குழந்தை பலி

Kogilavani   / 2014 மார்ச் 10 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவு, மாவிலங்குதுறையை சேர்ந்த சுதர்சன் கிருத்திக்கா என்ற ஒரு வயது குழந்தை ஞாயிற்றுக்கிழமை (9) குளத்தில் விழுந்து மரணமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மாவிலங்குதுறை மகா காளியம்மன் ஆலய வளாகத்தில் உள்ள குளத்தில் விழுந்தே இக்குழந்தை உயிரிழந்துள்ளது.

ஆலய வளாகத்தில சிரமாதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுகொண்டிருந்த நிலையில் குளத்திற்கு அருகில் சிறுவர்கள் பலர் விளையாடிக்கொண்டிருந்தாகவும் குழந்தை தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X