2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மது கைப்பற்றல்

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


போதைப் பாவனையற்ற நாட்டை உருவாக்குதல் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பொலிஸ் நிலையங்களினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ், கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மூலம் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதனை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது சட்ட விரோதமாக விற்பனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பெருமளவான மதுபான போத்தல்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது சட்ட விரோதமான முறையில் போத்தல்களில் அடைத்துக்கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை மதுபான போத்தல்களை துறைநீலாவனைப்பகுதியில் வைத்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்டது சுமார் 11ஆயிரம் மில்லி லீற்றர் மதுபானம் எனவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி அபூபக்கர் தெரிவித்தார்.

இதேவேளை களுவாஞ்சிகுடி நகரில் பாவனை திகதி முடிவடைந்த ஒரு தொகுதி குளிபானங்களையும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X