2025 மே 03, சனிக்கிழமை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய சந்திப்பு

Kogilavani   / 2014 மே 16 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய சந்திப்பு புதன்கிழமை (14) மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் அமைந்துள்ள கைட் நோசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்கலைக்கழக பட்டம் பெற்று தற்போது ஆசிரியர்களாக கடமை புரியும் ஆசிரியர்கள், விரிவுரையாளார்கள், மற்றும் பல்வேறு துறைசார் பதவி வகிப்பவர்கள்,  பல்கலைக்கழகங்களில் பட்டம்பெற்று வெளியேறிய மாணவர்கள், தற்போது இலங்கையிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்றுக் கொண்டிருக்கம் உள்வாரி, வெளிவாரி மாணவர்களென பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவடத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒனறியம் அமைப்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

உள்வாரி மற்றும் வெளிவாரி ரீதியாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அதில் பல்கலைக்கழகத்தின் நுழைவுப் பரீட்சையில் பெரும்பாலானோர் சித்திபெறாமல் உள்ளதாகவும், அந்த வகையில் அவற்றுக்குரிய நுண்ணறிவு உளசார்பு பரீட்சைகள் ஆசிரியர்களினால் நடாத்தப்படுவதில்லை  எனவும், அவற்றை பூர்த்தி செய்யவதற்காகவே இவ்வாறான செயற்பாட்டுக்குழுவை ஆரம்பிப்பது எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரையில் கல்வி நிலை  அடிமட்டத்தில் தள்ளப்பட்டுக் கொண்டு போகின்றது.  அதில் உயர் மட்டத்திற்கு கட்டியெழுப்பும் நோக்குடனே மட்டக்களப்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டு செயற்படவுள்ளதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட மட்டக்களப்பு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X