2025 மே 02, வெள்ளிக்கிழமை

நல்லின ஆடுகள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வடிவேல்-சக்திவேல்


தனிநபர் வருமானத்தை மேம்படுத்தும் பொருட்டு வேள்ட்விஷன் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்தித் திடத்தின் கீழ் (ADP) அனுசரணையுடன் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி, குளுவினமடு, கற்சேனை, தாந்தாமலை, கச்சக்கொடிசுவாமிமலை போன்ற கிராமங்களில் உள்ள 108 குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் வெள்ளிக்கிழமை (16) வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் அக்குடும்பங்களை சேர்ந்த 455அங்கத்தவர்கள் பயனடைய உள்ளனர்.

இதற்குரிய தொடர்ச்சியான கண்காணிப்புக்களில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச கால்நடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் ஈடுபடுகின்றனர்.

இவ் செயற்பாடானது பட்டிப்பளை பிராந்திய அரச நிறுவனங்களின் சேவைகளின் நிலைபேறு தன்மையை வலியுறுத்துவதுடன் வேள்ட்விஷன் அரச சார்பற்ற நிறுவனத்தின் பங்காளர் முறைமையான செயற்பாட்டுத் தன்மையை நீடித்து நிற்கும் அபிவிருத்திக்கு வழிவகுக்கின்றது. என மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X