2025 மே 03, சனிக்கிழமை

தொடர் கொள்ளை : இருவர் கைது

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். ரவீந்திரன், ரீ.எல்.ஜவ்பர்கான்

கடந்த  சில  நாட்களாக  மட்டக்களப்பு   மாவட்டத்தில் உள்ள  தபால் நிலையங்கள், சமூர்த்தி வங்கிகள் மற்றும், வர்த்தக நிலையங்களில்   இடம்பெற்ற  கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக  நபர்களை  களுவாஞ்சிக்குடி   பொலிஸார்  இன்று(18)   அதிகாலை  கைது  செய்துள்ளனர்.

குறித்த இரண்டு சநதேக நபர்களும் கல்முனை பிதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன்  20 இலட்சம் ரூபா பெறுமதியான கொள்ளையிடப்பட்ட  பொருட்களும்  மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் முருங்கனைச் சேர்ந்த ஒருவரும் கல்முனையை சேர்ந்த ஒருவருமே பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு, களுதாவளை, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம்  தபால் நிலையங்களிலும் தாளங்குடா, சவளக்கடை, மஞ்சந்தொடுவாய், ஓட்டமாவடி  சமூர்த்தி  வங்கிகளில்  இருந்தும்  கொள்ளையிடப்பட்ட  பொருட்கள் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பொருட்களில் இரண்டு  மோட்டார்  சைக்கிள்கள் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி   பிரதேச  உதவி பொலிஸ்  அத்தியட்சகர்   ரத்நாயக்க, பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி  சுஜித்பிரியந்த ஆகியோரின்   தலைமையிலான  குழுவினர்  விசாரணைகளை  மேற்கொண்டு  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X