2025 மே 03, சனிக்கிழமை

மோடியால் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்: த.ம.வி.பு

Menaka Mookandi   / 2014 மே 18 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

இந்தியாவில் புதிய பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இவரது ஆட்சியால், 60 வருடங்களாக புரையோடிப்போயுள்ள இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் யதார்த்த பூர்வமானதுமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்றும் அக்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர்  பூ.பிரசாந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய வரலாறு காணாத வெற்றியினை பெற்று எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியாவின் பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒன்றிணைக்கப்பட்ட இந்தியாவின் அரசியல், சமுக, கலாசார, பொருளாதார அபிவிருத்திப் பணிகளிலும் சர்வதேசக் கொள்கைகளிலும் தனித்துவமாக முடிவெடுக்கக் கூடிய பெரும்பான்மை பலம் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்துள்ளது வரவேற்றத்தக்கதும் பாரட்டக்ககூடியதுமான விடயமாகும்.

அந்த வகையில் சுமார் 60 வருடங்களாக புரையோடிப்போயுள்ள இலங்கை தமிழ்  பேசும் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் யதார்த்த பூர்வமானதுமான  அரசியல் தீர்வு பெறும் என்ற நம்பிக்கையுடன் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் நரேந்திர மோடிகும் தமது வாழ்த்துக்களை தொரிவிப்பதாக கூறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X