2025 மே 03, சனிக்கிழமை

கடலில் மூழ்கி இளைஞன் பலி

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன், தேவ அச்சுதன், எம்.எம்.அனாம்.


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடலில் மூழ்கி இளைஞரொருவர் இன்று (18) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் களுவன்கேணியைச் சேர்ந்த சித்திரவேல் ரமேஸ்கரன் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஜே.தனு (18) எனும் மற்றுமொரு இளைஞன் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் பாசிக்குடா கடற்கரைக்கு வந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X