2025 மே 03, சனிக்கிழமை

அரசுடன் மு.கா. சேராமலேயே இருந்திருக்கலாம்: ஹக்கீம்

Suganthini Ratnam   / 2014 மே 19 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இன்றுள்ள நிலைமையை பார்க்கும்போது அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப்; ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களை ஞாயிற்றுக்கிழமை (18) சந்தித்துக்  கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டது. கட்சி பாதுகாக்கப்பட வேண்டுமாகவிருந்தால், அரசாங்கத்துடன் இணையவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.

அரசாங்கத்துடன் இணைவதுதான் பொருத்தமென கட்சியின் பெரும்பாலானவர்களின் கருத்தும் அப்போது இருந்தது. கட்சி அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதில் பெரிய உடன்பாடு எதுவும் இருக்கவில்லை. கட்சியில் எஞ்சியுள்ளவர்களையும் காப்பாற்றவேண்டிய சூழ்நிலையிருந்தது.
அரசாங்கத்துடன் இணைந்து மூன்றரை வருடங்களாகின்றன. ஆனால், இன்றுள்ள நிலைமைகளை பார்க்கின்றபோது அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாமென்று எண்ணத்தோன்றுகின்றது.

கட்சி குறித்த கவலை அனைவருக்கும் இருக்கின்றது. விமர்சனங்களுக்கு கட்சியின் தலைமை முகம் கொடுக்க வேண்டியுமுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெறும் உணர்வு ரீதியாக அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுத்து விட முடியாது.

இதய பூர்வமாக கட்சி ஆதரவாளர்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்த வேண்டியுள்ளது. ஆதரவாளர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறவேண்டியுள்ளது. கட்சியின் அமைப்பு வேலைகளையும் பலப்படுத்த வேண்டியுள்ளது.

அடுத்த வருடம்  தேசிய மட்டத்தில் தேர்தலொன்று நடைபெறக்கூடிய சூழ்நிலையுள்ளது.  அது ஜனாதிபதித் தேர்தலாகவோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலாகவோ இருக்கலாம். இன்றுவரை ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவே கூறப்படுகின்றது. எனினும், இனிவரும் மாற்றங்களைப் பொறுத்து முடிவுகள் மாறக்கூடிய நிலையுமுள்ளது.

ஊவா மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஊவா மாகாணசபைத் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை கலைக்கப்பட்டு ஒரு வருடமாகின்றது. இதற்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும். இம்மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு அமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர் ஆகியோர் உள்ளனர். அவர்களின் ஆலோசனைகளுடன் கட்சியை  பலப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பான எந்தத் தீர்மானம் எடுப்பதாக இருந்தாலும், அவற்றை கல்குடாத்தொகுதியிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் ஆலோசனையுடனேயே எடுக்கப்படும' என்றார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீனின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம் உள்ளிட்ட பலர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0

  • KI Monday, 19 May 2014 06:16 AM

    அடுத்த கதை!!!

    Reply : 0       0

    Ken Monday, 19 May 2014 08:01 AM

    இவர் முடிவு எடுப்பதே இல்லை...

    Reply : 0       0

    mimajeed Monday, 19 May 2014 01:17 PM

    தேர்தல் நெருங்கினால் இந்த கதை வருவது வழமைதான்

    Reply : 0       0

    waakkalan Monday, 19 May 2014 02:38 PM

    அன்று பலபேர் சொன்னார்கள், இன்று நீங்கள் சொல்கிறீர்கள் தலைவா!!!!!!!!

    Reply : 0       0

    nesha Monday, 19 May 2014 04:13 PM

    ஆஹா, மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தல் வருகுதா? அதற்குத்தானா இங்கால பக்கம் உலாவ வந்தீக? நீங்க பக்கா அரசியல் வியாபாரியாக்கும்...

    Reply : 0       0

    thuwan funaid Monday, 19 May 2014 04:23 PM

    த. தே. கூட்டமைப்பில் கி.மா. சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நான் ஒரு முஸ்லிம் வேட்பாளராக களமிறங்கியபோது த.தே. கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் என்னிடம் சொன்னார்கள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் பிரசார மேடைகளில் மு.கா வை தாக்கியோ அல்லது மு.காவின் அங்கத்துவம் குறைந்து போகும்படி நடந்துகொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க நானும் எனது தேர்தல் பிரசார நடவடிக்கையை செய்தேன். இத் தேர்தலின் பின் மு.கா வுக்கு வாக்களித்த மக்கள், கி.மா சபையை த.தே. கூவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கவேண்டும் என எதிர்பார்த்தனர். ஆனால் சோரம்போய் பழக்கப்பட்டவர்கள் அதனை செவ்வனே செய்தார்கள். இதன் அடுத்த கட்டமாக வடபகுதித் தேர்தலில் அரச தரப்பு படுதோல்வி கண்டதால் மு.கா. செல்லாக் காசானார்கள். மேல் மாகாணத்திலும் அதே நிலை. அப்போதே நான் சொல்லி இருந்தேன் இப்படியே ஏதாவது ஒரு காரணம் சொல்லி மு.கா தலைமைத்துவம் முஸ்லிம்களை ஏலம்விடுவார்கள். இதனை வாக்களிக்கும் முஸ்லிம் பொதுமக்களுக்கு விளங்கும் ஆனால் கொஞ்சம் சுணங்கும் என்று. பார்த்தீர்களா? ஊவா மாகாண தேர்தலுக்கும் அங்குள்ள முஸ்லிம்களை ரவூப் ஹக்கீம் ஏலம்போட ஆயத்தமாகி விட்டார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X