2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு பல்கலைக் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

Kogilavani   / 2014 மே 20 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்

கடந்த 2ஆம் திகதி இடை நிறுத்தப்பட்ட கிழக்கு பலக்லைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை புதன்கிழமை(21) மீள ஆரம்பிக்கப்படுமென கிழக்கு பலக்லைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக கலை,கலாசார,வர்த்தக முகாமைத்துவ விஞ்ஞான மற்றும் விவசாய பீடங்களின் சகல மாணவர்களுக்குமான விரிவுரைகள் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, புதன்கிழமை அனைத்து பீட மாணவர்களுக்குமான கூட்டமொன்றும் கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக பதிவளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து பீட முதலாம் வருட மாணவர்களுக்கான கூட்டம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கும், அனைத்து பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கான கூட்டம் நண்பகள் 12மணிக்கும், அனைத்து பீட மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கூட்டம் பிற்பகள் 2.30 மணிக்கும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதி வசதிகள் வழங்கப்பட்ட அனைத்து மாணவர்களும் தத்தமது விடுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை(20.5.2015)மாலை 5 மணிக்கு முன்னதாக சமூகமளிக்குமாறு பதிவாளர் மேலும் கேட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X