2025 மே 02, வெள்ளிக்கிழமை

வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் போது இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டனர்

Kogilavani   / 2014 மே 22 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் போது கிழக்கு மாகாணத்திலிருந்து பெரும்பாலான இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு ஒரு சில கபடதாரிகளால் உணர்ச்சிவசப்படுத்தப்பட்டு வட்டுக் கோட்டைக்கே அனுப்பி வைக்கப்பட்டார்கள்' என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

'இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானமானது வெறுமனே அழிவுக்கான கோசங்களாக  இருந்ததே தவிர, எந்தவிதமான ஓர் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் அது வித்திடவில்லை. இதன்வாயிலாக கோஷங்களும் கோஷங்களை முன்வைத்த அந்த வட மேலாதிக்கவாதிகளும் வெற்றி பெற்றார்கள். ஆனால், ஒட்டு மொத்த எமது தமிழ் சமூகம் அழிவுப்பாதைக்கே சென்றது' என்றும் அவர் தெரிவித்தார்.

கட் நோஸன் பல்கலைகழகத்தில்; ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பாடங்களை கற்று அதனைப் பூர்த்திசெய்த ஒரு தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை பல்கலையின் நிறைவேற்றுப் பணிப்;பாளர் எஸ்.எஸ்.அமல் மாஸ்டர் தலைமையில் புதன்கிழமை மட்டக்களப்பு தெய்வநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'தோல்விகளை வெல்லக் கூடியதும் அதனை ஓர் அனுபவமாகவும், சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் இன்றைய இளைஞர்கள் திகழ வேண்டும்.

 இளைஞர்கள் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களது இவ்வாறான செயற்பாடுகள் அவர்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். ஆனால் இன்றை இளைஞர் சமுதாயம் அறிவுப் புரட்சியின் பால்  உந்தப்பட்டவர்கள். அவர்கள் நிச்சயம் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள். 

இன்று அறிவு சார்ந்த ஓர் சமூகத்துடன் நாம் பிண்ணிப் பிணைந்துள்ளோம். ஆதற்கேற்றால் போல் நாமுத் காலத்தின் தேவையறிந்து கற்று எதிர்காலத்தை வளமானதாக்கி கொள்ள வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X