2025 மே 02, வெள்ளிக்கிழமை

காட்டு யானைகளால் சேதமான குடியிருப்புகளை அதிகாரிகள் பார்வை

Suganthini Ratnam   / 2014 மே 23 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரவெட்டியாறு, 08ஆம் கட்டை ஆகிய கிராமங்களில் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்களை அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

வவுணதீவு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரீ.நிர்மலராஜ், உன்னிச்சை பிராந்திய வனவளத்திணைக்கள அதிகாரி எம்.எல்.எம்.நிஸ்மி, கிராம சேவையாளர் எஸ்.சதானந்தன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.தனபாலன்  ஆகியோரே சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, தனது வீடு 03 தடவைகள் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டதாக   கரவெட்டியாறு கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்டு அழகையா தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேசத்தில் சமீப நாட்களாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்திருப்பதாக மேற்படி  அதிகாரிகள் தெரிவித்தனர்.
   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X