2025 மே 02, வெள்ளிக்கிழமை

பழமைவாய்ந்த தீர்த்தக்கேணி தூய்மைப்படுத்தப்பட்டது

Kanagaraj   / 2014 ஜூன் 05 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாற்பதாம் கிராமத்திலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் தீர்த்தக்கேணி நேற்று(04) காலை சிரமதானம் மூலம் தூய்மைப்படத்தப்பட்டது.

மிகவும் பழமைவாய்ந்த இந்த தீர்த்தக்கேணி நீண்ட நாட்களாக தூய்மைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், நாற்பதாம் கிராமத்தின் இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இச் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிரமதானப்பணிக்கு களுவாஞ்சிகுடி பிராந்திய நீர்பாசண பொறியியலாளர் மயூரன் தமது பங்களிப்பினை வழங்கியதுடன், திக்கோடை பிரதேச மக்களும் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X